பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை


பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
x
திருப்பூர்


பல்லடம் அருகே உள்ள மந்திரிபாளையம் கிராமத்தில் கல்லாங்காடு தோட்டத்தில் வசித்து வந்த முத்துசாமியின் மனைவி பாலாமணி (வயது 57). இவர் அணிந்து இருந்த 7 பவுன்நகையை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி மர்ம ஆசாமி ஒருவர் பறித்து சென்றார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பூர் கருவம்பாளையம் ஏ.பி.டி. சாலையை சேர்ந்த லோகநாதன் (27) என்பவரை கைது செய்தனர். இதையடுத்து இவர் மீதான வழக்கு பல்லடம் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, நகைபறிப்பில் ஈடுபட்ட லோகநாதனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறியது


Next Story