மதுபாட்டில்கள் பதுக்கிய 3 வாலிபர்கள் கைது
சங்கரன்கோவிலில் மதுபாட்டில்கள் பதுக்கிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் அருணாச்சல ஈஸ்வரன் (வயது 25), வடகாசி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆவுடைய நாயகம் மகன் மணிகண்டன் (26), சங்குபுரம் தெருவை சேர்ந்தவர் அந்தோணி மகன் எட்வின் (20).
இவர்கள் 3 பேரும் அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி அதை கூடுதல் விலைக்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தனிப்படை போலீசார், 3 பேரையும் பிடித்து சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார், 3 பேரையும் கைது செய்து, 75 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story