கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி
மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் மற்றும் போலீசார் நேற்று குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை மறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் கீழமுன்னீர்பள்ளத்தை சேர்ந்த முப்பிடாதி (வயது 32), மேலப்பாளையத்தை சேர்ந்த சதாம் உசேன் (23), அப்துல்கரீம் (23) ஆகியோர் என்பதும், அவர்கள் கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story