மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்கள் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்கள் கைது
x

அவளூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

அவளூரை அடுத்த பெரும்புலிப்பாக்கம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 22). இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து ராஜ்குமார் அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவளூர் போலீசார் ஆயர்பாடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3 வாலிபர்கள் வந்த மோட்டார் சைக்கிளை மடக்கி பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் ஓட்டிவந்தது ராஜ்குமாரின் மோட்டார்சைக்கிள் என்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் பாணாவரம் பகுதியை சேர்ந்த வாசு மகன்கள் ராஜேஷ் (20), அஜித் (25), மற்றும் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த சரவணன் (19) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story