3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லை மாவட்டத்தில் 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

நெல்லை மாவட்டத்தில் 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கஞ்சா கடத்தல்

நெல்லை மாவட்டம் ஏர்வாடி சீனிவாசபுரம் கீழ தெருவைச் சேர்ந்த ராமர் மகன் அய்யாபிச்சை (வயது 22), கலுங்கடி வடக்கூர் நேதாஜி நகர் வடக்கு தெருவைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் லென்ஸ்குமார் (23) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வழக்கில் வள்ளியூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்காக, வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று அய்யாபிச்சை, லென்ஸ்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கு கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் வழங்கினர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் கல்லிடைக்குறிச்சியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ததாக மேலநத்தம் தளவாய் கோவில் தெருவை சேர்ந்த மகாராஜா (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை கலெக்டர் விஷ்ணு ஏற்று மகாராஜாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மகாராஜாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார்.


Next Story