3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லையில் கஞ்சா விற்பனையில் கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

நெல்லையில் கஞ்சா விற்பனையில் கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கஞ்சா விற்பனை

நெல்லை மாவட்டம் ராதாபுரம் போலீசார் கடந்த மாதம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டு இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ராதாபுரம் சமத்துவபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 23), சுடலையாண்டி (20), பரமேஸ்வரபுரத்தை சேர்ந்த ரஞ்சித் (25) ஆகியோர் என்பதும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்ய வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

குண்டர் சட்டம்

இந்த நிலையில் அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று, மணிகண்டன், சுடலையாண்டி, ரஞ்சித் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதற்கான ஆணையை ராதாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார்.


Next Story