30 விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள்


30 விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள்
x

ஏலகிரி மலையில் 30 விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

ஏலகிரிமலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஜோலார்பேட்டை வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 10 விவசாயிகளுக்கு பண்னை கருவிகள், 10 பேருக்கு தார்பாலின், 10 பேருக்கு பேட்ரி தெளிபான்கள் வழங்கப்பட்டது.

விழாவில் வேளாண்மை துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண்மை துறை உதவி இயக்குனர் வேல்முருகன் நன்றி கூறினார்.


Next Story