அரசு, தனியார் பஸ்களில் 30 ஏர்ஹாரன்கள் பறிமுதல்


அரசு, தனியார் பஸ்களில் 30 ஏர்ஹாரன்கள் பறிமுதல்
x

அரசு, தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த 30 ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக ஒலியை எழுப்பும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து இணை ஆணையர் பொன் செந்தில்நாதன் உத்தரவின்பேரில், வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இளங்கோ, சண்முக ஆனந்த், கருப்பசாமி, ஜாஸ்மின் ஆகியோர் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தனியார் பஸ்களில் மட்டுமின்றி அரசு பஸ்களிலும் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 30 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பஸ்களில் மீண்டும் ஏர்ஹாரன்களை பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story