வேனுடன் 30 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
வேனுடன் 30 மூடை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
வேனுடன் 30 மூடை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
ரேஷன் அரிசி
விருதுநகர் மாவட்ட உணவு பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் ஏழாயிரம்பண்ணை பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு ஒரு வேனில் ஏற்றிக் கொண்டிருந்த தலா 50 கிலோ கொண்ட 30 மூடை ரேஷன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கோவில்பட்டியை சேர்ந்த மாணிக்கராஜா (வயது 44), சாத்தான்குளத்தை சேர்ந்த சர்ச்சில் லேபர் என்பவர் மூலம் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவது தெரிய வந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏழாயிரம்பண்ணை எல்லம்மாள் காம்பவுண்ட் தெருவில் கைப்பற்றப்பட்ட 23 மூடை ரேஷன் அரிசியையும் மாணிக்கராஜா தான் வைத்திருந்தார் என்பதும் தெரியவந்தது.
2 பேர் கைது
இதன் பேரில் மாணிக்கராஜா, சாத்தான்குளம் சர்ச்சில் லேபர், வேன் டிரைவர் மற்றும் உரிமையாளர் கன்னியாகுமரியை சேர்ந்த அஜித் (23) ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் மாணிக்க ராஜாவையும், அஜித்தையும் கைது செய்தனர். சர்ச்சில் லேபரை தேடி வருகின்றனர்.