244 பயனாளிகளுக்கு ரூ.30½ கோடி கடனுதவி:தொழில் வணிக இயக்குனர் வழங்கினார்


244 பயனாளிகளுக்கு ரூ.30½ கோடி கடனுதவி:தொழில் வணிக இயக்குனர் வழங்கினார்
x
தினத்தந்தி 23 Feb 2023 6:45 PM GMT (Updated: 23 Feb 2023 6:46 PM GMT)

தேனியில் 244 பயனாளிகளுக்கு ரூ.30½ கோடி கடனுதவியை தொழில் வணிக இயக்குனர் வழங்கினார்.

தேனி

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொழிற்கடன் வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் சிஜி தாமஸ் வைத்தியன் தலைமை தாங்கி, தொழிற்கடன்களை வழங்கி பேசினார். இதில் அவர், 244 பயனாளிகளுக்கு ரூ.30 கோடியே 58 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார்.

அவர் பேசும்போது, "சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழிற்கடன் வேண்டி விண்ணப்பிக்கும் போது கடன் பரிசீலனையில் ஏற்படும் கால தாமதத்தை வங்கியாளர்கள் தவிர்க்க வேண்டும். சிபில் ஸ்கோர் குறைபாடு இருந்தாலும் தொழில்முனைவோர் அதற்கான நிலுவைத் தொகையை செலுத்தி தடையில்லா சான்று கொண்டு வரும் பட்சத்தில் அவர்களுக்கும் தாமதமின்றி வங்கிக்கடன் வழங்க வேண்டும்" என்றார். முகாமில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா முன்னிலை வகித்து பேசினார். இதில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அசோகன், உதவி இயக்குனர் தாண்டவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story