குடோனில் இருந்த 30 காலி சிலிண்டர்கள் திருட்டு
விழுப்புரத்தில் குடோனில் இருந்த 30 காலி சிலிண்டர்களை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்
விழுப்புரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 50). இவர் தனியார் கியாஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இதற்காக விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் கியாஸ் சிலிண்டர் குடோன் வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள், இந்த குடோனின் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 30 காலி சிலிண்டர்களை திருடிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து பாபு, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு காலி சிலிண்டர்களை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story