30 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது
ஆரணி சரகத்தில் 30 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது
திருவண்ணாமலை
ஆரணி
தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கனமழை பெய்தது. ஆரணி சரகத்தில் மொத்தம் 67 ஏரிகள் உள்ளன.
தற்போது பலத்த மழையால் கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏரி பாசன கால்வாயின் மூலம் குன்னத்தூர், காமக்கூர், அக்ராபாளையம், அடையபலம், மெய்யூர், இரும்பேடு உள்ளிட்ட 30 ஏரிகளில் முழு கொள்ளளவை எட்டியது.
தற்போது 2 ஏரிகளில் 75 சதவீதமும், 18 ஏரிகளில் 50 சதவீதமும் தண்ணீர் உள்ளது.
வானம் பார்த்த பூமியாக உள்ள 17 ஏரிகளில் 25 சதவீதம் தண்ணீர் இருப்பதாக பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கோவிந்தராஜன், உதவி பொறியாளர் ராஜகணபதி ஆகியோர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story