ரூ.30 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி


ரூ.30 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி
x

ரூ.30 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு ஊராட்சியில் ராஜீவ் நகர் முதல் இந்திரா நகர் வரையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளை பூமி பூஜை போட்டு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒன்றியக் குழு உறுப்பினர் வசந்தி அருள்ராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் வரதன், பாரதிதாசன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் தலைமை தாங்கி தார் சாலை பணிகளை பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வளையம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி கவுண்டர், பெரிய குரும்பதெரு வெங்கடேசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story