தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 30 பேர் கைது


தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 30 பேர் கைது
x

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி வேண்டும். மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டம் நடத்தி கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும். கல்வி தனியார்மயத்தை ஒழித்து கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் மற்றும் ஜனநாயக அமைப்புகள், விவசாய சங்கம் இணைந்து ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் அதிகாரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நிர்மலா தலைமை தாங்கினார். மாநில துணைச்செயலாளர் செழியன், தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை, மக்கள் உரிமை கூட்டணி மாவட்ட தலைவர் காசிம், தமிழ் தேச மக்கள் முன்னணி வக்கீல் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை கையில் ஏந்தி கோஷம் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர். இதனால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story