அனுமதியின்றி இயங்கிய பார் உள்பட 30 கடைகளுக்கு 'சீல்'


அனுமதியின்றி இயங்கிய பார் உள்பட 30 கடைகளுக்கு சீல்
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த பார் உள்பட 30 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த பார் உள்பட 30 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

பார் மூடல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் திருட்டுத்தனமாக மதுவிற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் முருகேஷ் உத்தரவிடடிருந்தார். அதன்பேரில் மாவட்ட காவல்துறை, கலால், டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் இணைந்து பல்வேறு இடங்களில் 'திடீர்' சோதனை மேற்கொண்டனர்.

மேலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாகவும், போலி மது விற்பனை செய்வதாகவும், திருட்டுத்தனமாக அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்வதாகவும் பல்வேறு புகார்கள் வரப்பெற்றது. அதன்பேரில் நடந்த சோதனையில் அனுமதி பெறாமல் ஒரு இடத்தில் பார் இயங்கி வந்தது தெரியவந்தது. பின்னர் அந்த பாரை மூடி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

கடைகளுக்கு 'சீல்'

மேலும் கடந்த 3 நாட்களில் நடத்தப்பட்ட சோதனையில் அரசு மதுபாட்டில்கள், சாராயம், கள் போன்றவற்றை திருட்டுத்தனமாக பெட்டிக்கடைகள், தள்ளுவண்டி கடைகளில் விற்பனை செய்ததாக 29 கடைகள் மூடப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது குறித்து தகவல் தெரியவந்தால் போலீசாரிடம் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story