ரயான் துணிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் ஈரோட்டில் 30 ஆயிரம் விசைத்தறிகள் வேலை நிறுத்தம்


ரயான் துணிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் ஈரோட்டில் 30 ஆயிரம் விசைத்தறிகள் வேலை நிறுத்தம்
x

ரயான் துணிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் ஈரோட்டில் 30 ஆயிரம் விசைத்தறிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. ரூ.6 கோடி மதிப்பிலான துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு

ரயான் துணிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் ஈரோட்டில் 30 ஆயிரம் விசைத்தறிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. ரூ.6 கோடி மதிப்பிலான துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

வேலை நிறுத்தம்

ஈரோடு வீரப்பன்சத்திரம், அசோகபுரம், சூளை, பெரியவலசு, மாணிக்கம்பாளையம், லக்காபுரம், சித்தோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 60 ஆயிரம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் ரயான், காட்டன் துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 30 ஆயிரம் விசைத்தறிகளில் ரயான் ரக துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தினமும் 24 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தியாகிறது.

ஈரோட்டில் தயாரிக்கப்படும் துணிகள் நிறமேற்றுவதற்காக வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் ரயான் துணிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் விசைத்தறியாளர்களுக்கு உரிய லாபம் கிடைக்கவில்லை. இதனால் தங்களது நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் வேலை நிறுத்த போராட்டத்தை விசைத்தறி உரிமையாளர்கள் அறிவித்தனர். அதன்படி ஈரோட்டில் ரயான் துணிகள் உற்பத்தி செய்யப்படும் விசைத்தறிகள் நேற்று செயல்படவில்லை. இந்த போராட்டம் வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது.

ரூ.6 கோடி

இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுரேஷ் கூறியதாவது:-

கடந்த ஒரு மாதமாக ரயான் நூலின் விலை எவ்வித மாற்றம் இல்லாமல் இருந்தது. 120 கிராம் எடை கொண்ட துணியின் விலை 15 நாட்களுக்கு முன்பு ரூ.28 ஆக இருந்தது. தற்போது ரூ.26-க்கு கூட மார்க்கெட்டில் விலைக்கு போகாத சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும் உற்பத்தி விலையை விட மார்க்கெட்டில் குறைந்த விலைக்கு துணிகள் விற்பனையாகிறது. வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் விற்பனை சரிவடைந்து உள்ளது. ரயான் துணிக்கு இணையாக காட்டன் துணியும் விலை குறைந்து உள்ளதாலும் ரயான் துணி விற்பனை குறைந்து விட்டது.

இதனால் மீட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் வருகிற 10-ந் தேதி வரை ரயான் துணி உற்பத்தியை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதில் சுமார் 30 ஆயிரம் விசைத்தறிகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு விசைத்தறிக்கூடங்கள் மூடப்பட்டு உள்ளன.

மேலும் 1,000-க்கும் மேற்பட்ட குடோன்களும் மூடப்பட்டு உள்ளன. இந்த உற்பத்தி நிறுத்தம் காரணமாக ஒரு நாளுக்கு ரூ.6 கோடி மதிப்பிலான ரயான் துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

வேலை நிறுத்தம் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, தமிழக அரசு விலையில்லா வேட்டி-சேலை உற்பத்தி செய்வதற்கான உத்தரவை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story