ஆட்டோவில் கடத்திய 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


ஆட்டோவில் கடத்திய 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

ஆட்டோவில் கடத்திய 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த ஆட்டோவில் சிறு சிறு மூடையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. விசாரணையில் அந்த அரிசியை கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் 300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஆட்டோ டிரைவரான விளவங்கோடு ஆலுவிளைவீடு பகுதியை சேர்ந்த ஜெஸ்டின் டார்வின் (வயது 36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story