கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி அனில்குமார் தலைமையில் தனி வருவாய் ஆய்வாளர் நிவாஸ்கார், ஊழியர் முருகதாஸ் ஆகியோர் நேற்று கன்னியாகுமரி கோவளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் மறைவான இடத்தில் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவற்றை சோதனையிட்டனர். இதில் 10 பைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரேஷன் அரிசி மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story