தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 300 போலீசார்
கர்நாடக மாநில தேர்தல் பாதுகாப்பு பணிக்கு தமிழக சிறப்பு போலீசார் 300 பேர் ஜோலார்பேட்டையில் இருந்கு ரெயில் மூலம் புறப்பட்டு சென்றனர்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாடு சிறப்பு காவல் படை 7-வது பட்டாலியனில் இருந்து 100 போலீசாரும், 10-வது பட்டாலியனில் இருந்து 100 போலீசாரும், 15-வது பட்டாலியனில் இருந்து 100 போலீசாரும் என மொத்தம் 300 தமிழ்நாடு சிறப்பு போலீசார் நேற்று சிறப்பு ரெயில் மூலம் கர்நாடகாவுக்கு புறப்பட்டனர்.
இதற்காக அவர்கள் ஜோலார்பேட்டைெரயில் நிலையத்திலிருந்து கர்நாடக மாநிலம் உடுப்பி வரை செல்லும் ரெயிலில் பயணம் மேற்கொண்டனர்.
பரபரப்பு
கர்நாடக மாநில தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ரெயில் மூலம் செல்ல தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் பிளாட்பாரத்தில் வரிசையாக அணிவகுத்து சென்றதால் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.