தோவாளை மார்க்கெட்டில்300 டன் பூக்கள் குவிந்தன


தோவாளை மார்க்கெட்டில்300 டன் பூக்கள் குவிந்தன
x

தோவாளை மார்க்கெட்டில்300 டன் பூக்கள் குவிந்தன விடிய, விடிய வியாபாரம் நடந்தது

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

கேரளாவில் ஓணம் பண்டிகை நாளை (ெசவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டம் கேரளாவையொட்டி உள்ளதால் இங்கும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் ஆண்டுதோறும் ஒருநாள் மட்டும் இரவு முழுவதும் வியாபாரம் நடக்கும். அதன்படி ஓணம் சிறப்பு விற்பனை நேற்று நடந்தது. இதற்காக வெளியூரில் இருந்து டன் கணக்கில் கிரேந்தி, செவ்வந்தி, வாடாமல்லி, ரோஸ் வகைகள், ஆஸ்ரா வகைகள் போன்ற கலர் பூக்கள் வரவழைக்கப்பட்டது. அதன்படி நேற்று சுமார் 300 டன் பூக்கள் மார்க்கெட்டில் வந்து குவிந்தன. நேற்று இரவு 9 மணியில் இருந்து வியாபாரம் தொடங்கியது. கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் வந்து பூக்களை வாங்கி சென்றனர். இந்த பூ வியாபாரம் விடிய விடிய நடைபெற்றது.


Next Story