மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 305 மனுக்கள் பெறப்பட்டது


மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 305 மனுக்கள் பெறப்பட்டது
x

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் 305 மனுக்கள் பெறப்பட்டது.

ராணிப்பேட்டை

குறைதீர்வு நாள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகு கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில், வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் உதவி வேண்டி, கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

305 மனுக்கள்

மொத்தம் 305 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு வழங்கிட உத்தரவிட்டார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, துணை கலெக்டர் தாரகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, கலால் உதவி ஆணையர் சத்திய பிரசாத், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story