31 இருளர் குடும்பங்களுக்கு மாற்று பகுதியில் இடம் ஒதுக்க நடவடிக்கை
31 இருளர் குடும்பங்களுக்கு மாற்று பகுதியில் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் நேற்றுமல்லகுண்டா மற்றும் குருபவானி குண்டா ஆகிய கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருளர் சமூகத்தை சேர்ந்த 31 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்கு மாற்று இடத்தை ஒதுக்கீடு செய்து குடியமர்த்துவது தொடர்பாக 31 குடும்பத்தினருடன் தாசில்தார் க.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் 31 குடும்பங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் மண்டல துணை தாசில்தார் அரிதாஸ், வட்ட சார்பு ஆய்வாளர் பாபு, வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story