தூத்துக்குடி மாவட்டத்தில் 31 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 31 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 31 தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உடனடியாக புதிய பணியிடங்களில் சேர மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டு உள்ளார்.
தாசில்தார்கள் இடமாற்றம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 31 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, விளாத்திகுளம் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் நிலம் எடுப்பு தனி தாசில்தார் யு.வசந்த மல்லிகா கோவில்பட்டி தாசில்தாராகவும், ஓட்டப்பிடாரம் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் நிலம் எடுப்பு தனி தாசில்தார் பி.வாமணன் திருச்செந்தூர் தாசில்தாராகவும், தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட் நிலம் எடுப்பு தனி தாசில்தார் எஸ்.சிவகுமார் ஸ்ரீவைகுண்டம் தாசில்தாராகவும், இஸ்ரோ அலகு 3 நிலம் எடுப்பு தனி தாசில்தார் ஐ.ரதிகலா எட்டயபுரம் தாசில்தாராகவும், தூத்துக்குடி கலால் மேற்பார்வையாளர் ஜி.கைலாசகுமாரசாமி ஏரல் தாசில்தாராகவும், இஸ்ரோ அலகு 8 நிலம் எடுப்பு தனி தாசில்தார் எஸ்.நாகசுப்பிரமணியன் சாத்தான்குளம் தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சிப்காட் பிரிவு 1 நிலம் எடுப்பு தனி தாசில்தார் எம்.பிரபாகரன், தூத்துக்குடி தாசில்தாராகவும், தூத்துக்குடி நெடுஞ்சாலை பணிகள் நிலம் எடுப்பு தனி தாசில்தார் ஜி.சுரேஷ் ஓட்டப்பிடாரம் தாசில்தாராகவும், வாஞ்சி மணியாச்சி- நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை திட்ட நிலம் எடுப்பு தனி தாசில்தார் ஜி.கலா விளாத்திகுளம் தாசில்தாராகவும், தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட் அலகு 8 நிலம் எடுப்பு தனி தாசில்தார் எஸ்.நாகராஜன், கயத்தாறு தாசில்தாராகவும், திருச்செந்தூர் தாசில்தார் ஏ.சுவாமிநாதன் மாவட்ட கலால் அலுவலக மேலாளராகவும், ஏரல் தாசில்தார் எம்.கண்ணன் இஸ்ரோ பிரிவு- 3 நிலம் எடுப்பு தனி தாசில்தாராகவும், சாத்தான்குளம் தாசில்தார் எஸ்.தங்கையா, இஸ்ரோ பிரிவு-8 நிலம் எடுப்பு தனி தாசில்தாராகவும், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ஜி.ராதாகிருஷ்ணன் ஸ்ரீவைகுண்டம் சமுக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், ஓட்டப்பிடாரம் தாசில்தார் எஸ்.நிஷாந்தினி கோவில்பட்டி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், விளாத்திகுளம் தாசில்தார் வி.சசிகுமார் தூத்துக்குடி ஆதிதிராவிடர் நல அலுவலக தனி தாசில்தாராகவும், கயத்தாறு தாசில்தார் எஸ்.சுப்புலெட்சுமி தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட் நிலம் எடுப்பு தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.
கோவில்பட்டி தாசில்தார் சி.சுசிலா ஓட்டப்பிடாரம் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் நிலம் எடுப்பு தனி தாசில்தாராகவும், எட்டயபுரம் தாசில்தார் இ.கிருஷ்ணகுமாரி விளாத்திகுளம் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் நிலம் எடுப்பு தனி தாசில்தாராகவும், தூத்துக்குடி தாசில்தார் ஆர்.செல்வகுமார் தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட் பிரிவு- 8 நிலம் எடுப்பு தனி தாசில்தாராகவும், ஸ்ரீவைகுண்டம் சமுக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் டி.வி.ரமேஷ் தூத்துக்குடி சிப்காட் பிரிவு-1 நிலம் எடுப்பு தனி தாசில்தாராகவும், கோவில்பட்டி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கே.இசக்கிராஜ் தூத்துக்குடி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், தூத்துக்குடி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் எம்.ராஜலட்சுமி தூத்துக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், தூத்துக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஜே.ராஜசெல்வி வாஞ்சிமணியாச்சி- நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை திட்ட பிரிவு- 2 தனி தாசில்தாராகவும், தூத்துக்குடி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் டி.தில்லையாண்டி மாவட்ட தேர்தல் பிரிவு தனி தாசில்தாராகவும், மாவட்ட தேர்தல் பிரிவு தனி தாசில்தார் ஆர்.ரகு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக பறக்கும் படை தனி தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர்.
பறக்கும் படை
மேலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக பறக்கும் படை தனி தாசில்தார் ஜி.ஞானராஜ், தூத்துக்குடி நெடுஞ்சாலை பணிகள் நிலம் எடுப்பு தனி தாசில்தாராகவும், தூத்துக்குடி குடிமை பொருள் தனி தாசில்தார் ஏ.ஜஸ்டின் செல்லத்துரை, மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளராகவும் (குற்றவியல்), மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) டி.ஜான்சன் தேவசகாயம், தூத்துக்குடி குடிமை பொருள் தனி தாசில்தாராகவும், அல்லிகுளம் சிப்காட் பிரிவு- 2 நிலம் எடுப்பு தனி தாசில்தார் எஸ்.பேச்சிமுத்து ஏரல் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், ஏரல் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் எம்.சங்கரநாராயணன் அல்லிகுளம் சிப்காட் பிரிவு-2 நிலம் எடுப்பு தனி தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர்.
பணியிட மாறுதல் செய்யப்பட்ட தாசில்தார்கள் அனைவரும் உடனடியாக புதிய பணியிடத்தில் பணியேற்க வேண்டும் என்றும் உத்தரவில் கலெக்டர் தெரிவித்து உள்ளார்.