இமானுவேல்சேகரன் குருபூஜைக்கு விதிகளை மீறி சென்ற 31 வாகனங்கள் பறிமுதல்; ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை- போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் பேட்டி

இமானுவேல்சேகரன் குருபூஜைக்கு விதிகளை மீறி சென்ற 31 வாகனங்கள் பறிமுதல்; ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை- போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் பேட்டி
x

இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு விதிகளை மீறி சென்ற 31 வாகனங்கள் பறிமுதல் செய்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் தெரிவித்தார்.

மதுரை

இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு விதிகளை மீறி சென்ற 31 வாகனங்கள் பறிமுதல் செய்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் தெரிவித்தார்.

வாகனங்கள் பறிமுதல்

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை ஆய்வு செய்தார். பின்னர் அவர் இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-,

பரமக்குடியில் கடந்த 11-ந் தேதி நடந்த இமானுவேல் சேகரன் நினைவு நாள் குரு பூஜைக்கு வாகனங்களில் செல்பவர்கள் காவல்துறை மற்றும் அரசு விதிமுறைகளின்படி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டம் வழியாக பிற மாவட்டங்களில் இருந்து பல்வேறு வாகனங்களில் அரசு விதித்த விதிகளை மீறி சென்றதாக 31 வழக்குகள் சிலைமான் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 25 கார்கள், 6 மோட்டார் சைக்கிள்கள் என 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த 31 வாகனங்களை ஓட்டி வந்த டிரைவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்.

2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

மேலும் இன்று (27-ந்தேதி) மருதுபாண்டியர் நினைவு நாள், 29, 30-ந் தேதிகளில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மரியாதை செலுத்த செல்பவர்கள் போலீசார் மற்றும் அரசு விதிகளின்படி விழாவிற்கு சென்று வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேவர் ஜெயந்திக்கு மதுரை மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விழாவிற்கு முதல்-அமைச்சர் வருகை தருவதால் கூடுதல் அளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாகனங்களில் விதிமுறைகளை மீறி செல்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், வழக்குப்பதிவு செய்தும் அந்த வாகனங்களை பறிமுதல் செய்யவும் போலீசாருக்கு அதிகாரம் உள்ளது. மிக அதிக வேகமாக செல்வோர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகளை பின்பற்ற விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story