சிறப்பு மருத்துவ முகாமில் 312 பேருக்கு சிகிச்சை
சிறப்பு மருத்துவ முகாமில் 312 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வேலூர்
வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட குருமலையில், ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் சசிகுமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெய்சங்கர், மருத்துவ அலுவலர்கள் ராகேஷ், ராஜேஷ், வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார்.
இதில் டாக்டர்கள் ரூபன்குமார், துர்கா, சரண்யா, பிரபாவதி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். குருமலை, வெள்ளைக்கல் மலை, நச்சிமேடு உள்ளிட்ட மலை கிராமங்களை சேர்ந்த 312 பேர் சிகிச்சை பெற்றனர்.
Related Tags :
Next Story