ரூ.3.21 கோடி கஞ்சா அழிப்பு
நாங்குநேரி அருகே, ரூ.3 கோடியே 21 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் அழித்தனர்.
இட்டமொழி:
நாங்குநேரி அருகே, ரூ.3 கோடியே 21 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் அழித்தனர்.
கஞ்சா பறிமுதல்
தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி ஆகிய 6 மாவட்டங்களில் கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து ரூ.3.21 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது சுமார் 1,300 கிலோ எடை கொண்டதாகும்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவை அழிக்க முடிவு செய்யப்பட்டது.
அழிப்பு
இதையடுத்து நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாப்பான்குளம் பொத்தையடியில் உள்ள ஒரு கம்பெனியில் வைத்து தென் மண்டல கஞ்சா ஒழிப்பு கமிட்டி உறுப்பினர், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மேற்பார்வையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் முன்னிலையில் அந்த கஞ்சா அழிக்கப்பட்டது.
முன்னதாக அதனை நடமாடும் தடய அறிவியல் சோதனை மைய ஆய்வாளர் வித்யாராணி ஆய்வு செய்தார். பின்னர் கஞ்சாவை தீயில் போட்டு அழித்தனர்.