3,218 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்


3,218 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்
x

மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்ற நீட்தேர்வினை 3,218 மாணவ-மாணவிகள் எழுதினர். 77 பேர் வரவில்லை.

விருதுநகர்

மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்ற நீட்தேர்வினை 3,218 மாணவ-மாணவிகள் எழுதினர். 77 பேர் வரவில்லை.

நீட் தேர்வு

மத்திய அரசு இளநிலை மருத்துவ பட்ட படிப்பிற்கான நீட் தகுதி தேர்வினை நேற்று அகில இந்திய அளவில் நடத்தியது. அதில் விருதுநகர் மாவட்டத்தில் 6 மையங்களில் தேர்வு நடைபெற்றது. விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பி.எஸ்.சி. ஆங்கிலப்பள்ளி, திருத்தங்கல் ஏ.ஏ.ஏ. இன்டர்நேஷனல் பள்ளி, அருப்புக்கோட்டை மினர்வா பப்ளிக் பள்ளி, சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனி குரு மாடர்ன் பள்ளி, ஆர்.ஆர். நகர் ராம்கோ வித்யாலயா ஆகிய 6 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 792 மாணவ மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 774 பேர் தேர்வு எழுதினர். 18 பேர் வரவில்லை. பி.எஸ்.சி. ஆங்கிலப்பள்ளி மையத்தில் 576 பேர் எழுத வேண்டிய நிலையில் 568 பேர் தேர்வு எழுதினர். 8 பேர் வரவில்லை. திருத்தங்கல் ஏ.ஏ.ஏ. இன்டர்நேஷனல் பள்ளியில் 720 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 706 பேர் தேர்வு எழுதினர். 14 பேர் வரவில்லை.

96.23 சதவீதம் பேர்

அருப்புக்கோட்டை மினர்வா பப்ளிக் பள்ளியில் 504 பேர் தோ்வு எழுத வேண்டிய நிலையில் 485 பேர் தேர்வு எழுதினர். 19 பேர் தேர்வு எழுத வரவில்லை. சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனிகுரு மாடர்ன் பள்ளியில் 216 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 211 பேர் எழுதினர். 5 பேர் வரவில்லை.

ஆர்.ஆர்.நகர் ராம்கோ வித்யாலயாவில் 487 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 474 பேர் தேர்வு எழுதினர். 13 பேர் வரவில்லை. ஆக மொத்தம் 3,295 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 3,218 பேர் தேர்வு எழுதினர். 77 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுதியவர்களின் சதவீதம் 97.66 ஆகும். அதிகபட்சமாக விருதுநகர் பி.எஸ்.சி. ஆங்கிலப்பள்ளி மையத்தில் 98.61 சதவீதம் பேரும், குறைந்த பட்சமாக அருப்புக்கோட்டை மினர்வா பப்ளிக் பள்ளியில் 96.23 சதவீதம் பேரும் தேர்வு எழுதினர்.

விதிமுறைகள்

தேர்வு மையங்களில் தேர்வு எழுத மாணவ-மாணவிகள் வரும்போதே விதிமுறைகள் பற்றி அறிவிக்கப்பட்டது. அதன்படி மாணவர்கள் முழுக்கைச்சட்டை அணிந்தோ, பெல்ட் அணிந்தோ வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

மாணவிகள் கம்மல், துப்பட்டா அணிந்து வரக்கூடாது. தலைமுடியை கொண்டை போட்டு கொண்டு வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே பல மாணவ-மாணவிகள் விதிமுறைகளை தெரிந்து அதன்படி வந்த நிலையில் சில மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்கு வந்த பின்பு இந்த அறிவிப்பினை தொடர்ந்து அதன்படி தேர்வு மையத்திற்கு வெளியே வந்து தங்களை தயார் செய்து கொண்டு மையத்திற்குள் சென்றனர்.


Next Story