திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 32,564 பேர் எழுதுகின்றனர்


திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 32,564 பேர் எழுதுகின்றனர்
x

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 32,564 பேர் எழுதுகின்றனர்

திருச்சி

தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்பு பொதுத் தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. திருச்சி மாவட்டத்தில் பிளஸ்- 2 பொதுத் தேர்வை 15,487 மாணவர்கள் மற்றும் 17,077 மாணவிகள் என மொத்தம் 32,564 பேர் எழுதுகின்றனர். 11-ம் வகுப்பு பொதுத் தேர்வை 14,034 மாணவர்கள், 16,618 மாணவிகள் என மொத்தம் 30,652 மாணவ-மாணவிகள் 133 மையங்களில் எழுத உள்ளனர். இதேபோல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 17,494 மாணவர்கள், 17,393 மாணவிகள் என மொத்தம் 34,887 பேர் 166 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசின் வழிக்காட்டுதலின் படி சொல்வதை எழுதுபவர் ஏதேனும் ஒரு மொழிப் பாடம் எழுதுவதில் விலக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் ஆகிய சலுகைகள் அரசு தேர்வுகள் இயக்குனரால் வழங்கப்பட்டுள்ளன. இத் தேர்வுப் பணிக்கு ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வுகளை காண்காணிக்க கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் பறக்கும்படை மற்றும் அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசாருடன் இணைந்து தேர்வுகளில் எவ்வித முறைகேடும் நடைபெறாமல் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story