குமரியில் 33 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தகுதி
நீட் தேர்வின் மூலம் அரசின் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் குமரியை சேர்ந்த 33 மாணவர்கள் மருத்துவப்படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.
நாகர்கோவில்:
நீட் தேர்வின் மூலம் அரசின் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் குமரியை சேர்ந்த 33 மாணவர்கள் மருத்துவப்படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மருத்துவப்படிப்புக்கு 33 பேர் தகுதி
தமிழகத்தில் 12 ஆயிரத்து 840 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் 35 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதாக பள்ளி கல்வித்துறை அறிவித்தது. அதே சமயத்தில் தமிழக அரசு வழங்கிய 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின்படி குமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்ற 33 பேர் நீட் தேர்வில் மருத்துவப் படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் 5 மாணவர்களை தவிர மற்றவர்கள் ஆங்கில வழியில் பயின்றவர்கள் ஆவர்.
தகுதி பெற்றதில் இரண்டாவது முறையாக 3 பேர் தேர்வு எழுதியவர்கள் ஆவர். இதில் தாழக்குடி அரசு மேல்நிலை பள்ளியில் பயின்ற சுஜித் 315 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் உள் ஒதுக்கீட்டின்படி முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலை பள்ளி மாணவி சுபிக்சா 304 மதிப்பெண்ணும், நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி மாணவர் ஹரிகுமார் 292 மதிப்பெண்ணும், தாழக்குடி அரசு மேல்நிலை பள்ளி மாணவி ஆதிரா 259 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.
மதிப்பெண் விவரங்கள்
உள்ஒதுக்கீட்டில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்களது மதிப்பெண் விவரம் வருமாறு:-
கோட்டார் கவிமணி பள்ளி தனேஸ்வரி (248), ஏழுதேசப்பற்று அரசு பள்ளி ரேஷ்மா (215), முன்சிறை அரசு பள்ளி கிருஷ்ணபிரியா (211), கொட்டாரம் அரசு பள்ளி ஈவ்லயல் (186), கண்ணாட்டுவிளை அரசு பள்ளி தர்ஷினி (181), கோட்டார் கே.டி.வி.பி. ஷாமினா (175), ஆனக்குழி பள்ளி ஜிஜோராஜேஷ் (184), காற்றாடித்தட்டு அரசு பள்ளி ஜெயஸ்ரீ (160), மார்த்தாண்டம் மகளிர் பள்ளி ஆர்த்தி (154), அகஸ்தீஸ்வரம் அரசு பள்ளி கீர்த்தனா (154), தக்கலை அரசுபள்ளி அஸ்வினி (154), கண்ணாட்டுவிளை அரசு பள்ளி கோபிஷா (141), அம்மாண்டிவிளை அரசு பள்ளி சூரியஜோதி (139), செண்பகராமன்புதூர் சந்தியா (131), ஆரல்வாய்மொழி பெனினா (125), கல்குளம் அரசு பள்ளி சாருஸ்ரீ (124), கொட்டாரம் அரசு பள்ளி சரசுராம் (122), கோட்டார் கே.டி.வி.பி. பள்ளி ஷீபலி பவதன் (122), அனந்தநாடார்குடி அரசு பள்ளி லிவின்பால் (114), கருங்கல் அரசு பள்ளி பிளசோபாபி (110), வல்லன்குமாரவிளை அரசு பள்ளி நீலவன் (109), முன்சிறை அரசு மகளிர் பள்ளி அக்சயா (103), கல்குளம் அரசு பள்ளி விக்னேஷ் (100), சாமுவேல் (100), காட்டாத்துறை அரசு பள்ளி ஜெனிஸ் (100), வடசேரி அரசு பள்ளி ஸ்ரீதேவி (100), வல்லன்குமாரவிளை அரசு மேல்நிலைப் பள்ளி ஆஷிகா (100), கோட்டார் கே.டி.வி.பி. பள்ளி சுமித்ரா (99), கண்ணாட்டுவிளை அரசு பள்ளி சூரியா (97).