33 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது


33 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
x

திருச்சியில் 33 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி பாலக்கரை கீழப்புதூர் மெயின்ரோட்டில் நேற்று முன்தினம் பகல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கோவில் அருகே 2 பேர் விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், ரெயில்நகர் மெயின்ரோட்டை சேர்ந்த அப்துல்ரகுமான் (வயது 31), திருவெறும்பூர் கூத்தைப்பார்தெருவை சேர்ந்த ஜாகீர்உசேன் (29) என்பது தெரியவந்தது. இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 33 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story