ஊரக வளர்ச்சித்துறையில் 33 அதிகாரிகள் இடமாற்றம்
சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் 33 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சேலம்
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் பல்வேறு நிலைகளில் அதிகாரிகளை பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் செய்து கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆத்தூரில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய துரைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார். மேலும் அவர் சேலம் ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதேபோல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உதவியாளராக பணியாற்றிய 4 பேர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுதவிர 16 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 12 உதவியாளர்கள் ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story