கலப்பட உணவுப்பொருட்கள் விற்பனை வழக்கு: 33 பேருக்கு ரூ.5½ லட்சம் அபராதம்


கலப்பட உணவுப்பொருட்கள் விற்பனை வழக்கு: 33 பேருக்கு ரூ.5½ லட்சம் அபராதம்
x

கலப்பட உணவுப்பொருட்கள் விற்றதாக 33 பேருக்கு ரூ.5½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் கலப்பட உணவுப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்பவர்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி சேலம், ஓமலூர், மேட்டூர், ஆத்தூர், சங்ககிரி, எடப்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் மளிகை கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த ஒரு மாதமாக ஆய்வு நடத்தினர். அப்போது கலப்பட உண்வுப்பொருட்கள், தரமற்ற உணவுப்பொருட்கள் தயாரித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் கூறும் போது, கடந்த ஒரு மாதத்தில் கலப்பட எண்ணெய், கலப்பட வெல்லம், தரமற்ற மசாலா பொருட்கள் தயாரித்த 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்களுக்கு ரூ.5 லட்சத்து 49 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.


Next Story