மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் 33 பேர் மனு
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் 33 பேர் மனு அளித்தனர்.
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் 33 பேர் மனு அளித்தனர்.
ஆரணி கோட்டை மைதானம் அருகே அமைந்துள்ள ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) வ.தேன்மொழி தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மூத்த குடி பட்டா மாறுதல், தமிழ் நில திருத்தம், பட்டா ரத்து, பரப்பு திருத்தம், ஆதரவற்ற விதவை சான்று, பட்டா வழங்கல், ஆக்கிரமிப்பு அகற்றல், இலவச வீட்டு மனை பட்டா உள்பட 23 துறையின் சார்பாக 33 நபர்கள் குறை மனுக்கள் வழங்கினர்.
இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
முகாமில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் குமாரவேலு உள்பட ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய தாலுகா உள்ளடக்கிய அனைத்து அரசு துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.