தேசிய திறனாய்வு தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 34 பேர் வெற்றி


தேசிய திறனாய்வு தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 34 பேர் வெற்றி
x

தேசிய திறனாய்வு தேர்வில் செட்டிகுளம் அரசு பள்ளி மாணவர்கள் 34 பேர் வெற்றி பெற்றனர்.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

மத்திய அரசு ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தி வருகிறது. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் நான்கு வருடங்களுக்கு 48 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கி வருகிறது. இந்த ஆண்டு நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 34 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்று மாவட்டத்தில் முதலிடமும், மாநிலத்தில் 2-ம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர். சாதனை படைக்க காரணமாக இருந்த தலைமை ஆசிரியை சாந்தினி பொன்குமாரி மற்றும் பயிற்சி ஆசிரியர் ஜேசு ஆகியோரை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏசுதாசன், இணைச் செயலர் ரசூல், பொருளாளர் லிங்கத்துரை உட்பட பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பெற்றோர்களும் பாராட்டினர்.


Next Story