மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 340 மனுக்கள் பெறப்பட்டன
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 340 மனுக்கள் பெறப்பட்டன.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அன்னவாசல் பெரியகுளம் ஆயக்கட்டு நீரினை பயன்படுத்துவோர் சங்க நீர்ப்பாசன தேர்தலை தள்ளி வைக்க கோரி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தரப்பில் மனு அளித்தனர். இதேபோல கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 340 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க அதிகாரி உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story