சாத்தனூர் அணையிலிருந்து 3,440 கன அடி நீர் வெளியேற்றம்
சாத்தனூர் அணையிலிருந்து 3,440 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு 9 ஷட்டர்கள் வழியாக சீறிப்பாய்கிறது.
திருவண்ணாமலை
தண்டராம்பட்டு
சாத்தனூர் அணையிலிருந்து 3,440 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு 9 ஷட்டர்கள் வழியாக சீறிப்பாய்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும் இதில் 7 ஆயிரத்து 321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். தற்போது அணையில் 116.30 அடி அளவிற்கு அதாவது 6 ஆயிரத்து 722 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது தொடர் மழையாலும், கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதாலும் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 240 கன அடி நீர் வீதம் வந்து கொண்டிருக்கிறது.
அணை நிரம்ப இன்னும் 2 அடியே உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி முன்பகுதியில் உள்ள 9 ஷட்டர்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தண்ணீர் சீற்ப்பாய்ந்து விழுவதை சுற்றுலா பயணிகள் கண்ணுக்கு வுிருந்தாக அமைந்துள்ளது.
Related Tags :
Next Story