349 வாகனங்கள் ரூ.19 லட்சத்துக்கு ஏலம்
349 வாகனங்கள் ரூ.19 லட்சத்துக்கு ஏலம்
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பொது ஏலமிடும் நிகழ்ச்சி, திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் மொபட், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்கள் உள்பட மொத்தம் 375 வாகனங்கள் ஏலமிடப்பட்டன. இந்த வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்காக ஏராளமானோர் குவிந்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் முன்னிலையில் வாகனங்கள் ஏலம் நடைபெற்றது. இதில் 349 வாகனங்களை மக்கள் போட்டி போட்டு ஏலத்தில் வாங்கினர். இந்த வாகனங்கள் மொத்தம் ரூ.18 லட்சத்து 97 ஆயிரத்து 794-க்கு விற்பனை ஆனது. ஆனால் 26 வாகனங்களை யாரும் ஏலத்தில் வாங்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி, துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story