அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 35 பேர் கைது
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவின் மாநில தலைவர் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீஸ் தரப்பில் அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனாலும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை இந்து முன்னணி சார்பில் வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கனல் கண்ணனை போலீசார் கைது செய்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் 35 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
2 காலம்.