துபாயில் இருந்து மதுரை வந்த பயணியிடம் ரூ.35 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


துபாயில் இருந்து மதுரை வந்த பயணியிடம் ரூ.35 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 25 Sept 2022 1:38 AM IST (Updated: 25 Sept 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் இருந்து மதுரை வந்த பயணியிடம் ரூ.35 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

மதுரை

துபாயில் இருந்து மதுரைக்கு தினமும் விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை துபாயில் இருந்து மதுரை வந்த தனியார் விமானத்தில் 160 பயணிகள் வந்தனர். இதில் பயணம் செய்த தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருபுவனம் பகுதியை சேர்ந்த அவினாஷ் என்பவரிடம் சுங்க புலனாய்வு துறையினர் சோதனை செய்தனர். அப்போது அவரிடம், துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 348 கிராம் எடையுள்ள நிக்கல் பிளேட் கோட்டிங் பூசப்பட்ட வட்ட வடிவிலான தங்க பொருளும், 349 கிராம் அலுமினிய காப்பு போல் உள்ள தங்க பொருளும் இருந்தது. இதனை சுங்க புலனாய்வு துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அவினாஷிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 697 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.35 லட்சத்து 21 ஆயிரத்து 244 இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சுங்க இலாகா நுண்ணறிவு புலானாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story