மனநலம் பாதிக்கப்பட்ட 35 பேர் தெலுங்கானா மாநிலத்திற்கு அனுப்பி வைப்பு


மனநலம் பாதிக்கப்பட்ட 35 பேர் தெலுங்கானா மாநிலத்திற்கு அனுப்பி வைப்பு
x

விழுப்புரத்தில் இருந்து ரெயில் மூலமாக மனநலம் பாதிக்கப்பட்ட 35 பேர் தெலுங்கானா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

தமிழகத்தில் பசியில்லா தமிழகம் என்ற அமைப்பின் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டு வீதியில் சுற்றித்திரிபவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு முடிதிருத்தம் செய்து காப்பகத்தில் தங்க வைத்து பராமரித்து வருகின்றனர். அவ்வாறு பராமரிக்கப்பட்டு வருபவர்கள் நாளடைவில் உடல்நலம் தேறியவுடன் அவர்களை உறவினர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். இப்படியாக தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்துள்ள சமூக அமைப்பை சார்ந்த இவர்கள் தமிழகம் முழுவதும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 35 பேரை மீட்டு விழுப்புரத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைத்து பராமரித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் 35 பேரையும் குடும்பத்தினர், உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலமாக செகந்திராபாத்திற்கு அழைத்துச்சென்றனர். இதுகுறித்து அந்த சமூக அமைப்பினர் கூறுகையில், பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழகத்திற்கு அதிகளவில் வருகை புரிகின்றனர். அவ்வாறு வருகை புரிபவர்களை மீட்டு அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்கும்போது மனநலம் பாதிக்கப்பட்டவரை ஏன் எங்களிடம் ஒப்படைக்கிறீர்கள் என கேட்பதாகவும், உறவினர்கள் பாதிக்கப்பட்டு தொலைந்துபோனால் தேடுவதில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.


Next Story