சேலம் மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா
x

சேலம் மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 38 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று மேலும் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சேலம் மாநகராட்சியில் 21 பேர், எடப்பாடி, வீரபாண்டி, சேலம் ஒன்றியம் பகுதியில் தலா 3 பேர், கெங்கவல்லி 2 பேர், ஓமலூர், நங்கவள்ளி, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேசமயம், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 17 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாவட்டத்தில் 204 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் வெளியே செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து செல்லுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story