சேலம் மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 36 பேருக்கு கொரோனா பாதித்தது. நேற்று புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதித்து இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி மாநகரில் 11 பேர் பாதிப்படைந்தனர். மேச்சேரி, கொளத்தூர், வீரபாண்டி, தாரமங்கலம், ஆத்தூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையத்தில் தலா ஒருவர், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடியில் தலா 2 பேர், பனமரத்துப்பட்டியில் 3 பேர் பாதிக்கப்பட்டனர். அதே போன்று தர்மபுரி, நாமக்கல் ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வந்த 5 பேர் உள்பட 35 பேருக்கு கொரோனா பாதித்தது.
Related Tags :
Next Story