குவைத் நாட்டில் சிக்கியுள்ள 35 பேரை மீட்க வேண்டும்-கலெக்டரிடம் உறவினர்கள் மனு


குவைத் நாட்டில் சிக்கியுள்ள 35 பேரை மீட்க வேண்டும்-கலெக்டரிடம் உறவினர்கள் மனு
x

குவைத் நாட்டில் சிக்கியுள்ள 35 பேரை மீட்க வேண்டும்-கலெக்டரிடம் உறவினர்கள் மனு

மதுரை


மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகரிடம், அழகம்மாள், பஞ்சவர்ணம் உள்பட ஏராளமானோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 35 பேர் குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்று உள்ளனர். இவர்கள் அனைவரும் மதுரை மேலூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை கொடுத்து குவைத் நாட்டிற்கு சென்று உள்ளனர். கடந்த மாதம் 4-ந் தேதி மதுரையில் இருந்து மும்பை சென்ற அவர்கள் பின்னர் அங்கிருந்து குவைத் நாட்டிற்கு விமானம் மூலம் சென்று உள்ளனர். அங்கு சென்ற அவர்களுக்கு கட்டுமான நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டது. அதன் பின்னர் திடீரென்று உங்களுக்கு இங்கு வேலை இல்லை என்று அனுப்பி விட்டனர். அதனால் அவர்கள் வேறுவழியின்றி ஒரு அறையில் அடைப்பட்டுள்ளனர். கையில் பணம் இல்லாததால் அனைவரும் சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் நிலை ஏற்பட்டு விட்டது. இதுகுறித்து மேலூரில் உள்ள தனியார் நிறுவனத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே குவைத் நாட்டில் சிக்கியுள்ள 35 பேரையும் மீட்டு வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story