கள்ளக்காதலி- கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை


கள்ளக்காதலி- கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை
x

கள்ளக்காதலி- கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

திருப்பூரில் வாலிபர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் அவரது கள்ளக்காதலி, கணவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கள்ளக்காதல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மனைவி அபிராமி (வயது 24). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் சிவகாசியில் உள்ள அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். அதே நிறுவனத்தில் சிவகாசியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவரும் வேலை பார்த்து வந்தார். அப்போது மணிகண்டனுக்கும், அபிராமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இந்த நிலையில் அபிராமி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து மணிகண்டன், தனது தாயார் பாண்டியம்மாள் மற்றும் குழந்தைகளுடன் திருப்பூருக்கு வந்து தியாகி குமரன் காலனியில் வீடு வாடகைக்கு பிடித்து குடியிருந்து வந்துள்ளனர்.

கொன்று புதைப்பு

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மணிகண்டனின் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. அவரது உடல் கிடந்த பகுதியில் இருந்து சற்று தொலைவில் இருந்த அபிராமியின் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று வீட்டுக்குள் தோண்டி பார்த்தனர். அப்போது அங்கு செல்போனும், சிதைந்த கையும் இருந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

எனவே மணிகண்டனை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த பின்னர் துர்நாற்றம் வீசியதால் உடலை மீ்ண்டும் குழியில் இருந்து எடுத்துச் சென்று எரித்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

விசாரணை

இந்த கொலை தொடர்பாக 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அபிராமி, அவரது கணவர் பரமசிவம் ஆகியோைர நேற்ற பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் முடிவில்தான் மணிகண்டன் எப்படி கொலை செய்யப்பட்டார், யார் கொலை செய்தார் என்ற விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட மணிகண்டனுக்கு திருமணமாகி புவனேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவம் குறித்து கேள்விப்பட்டு சிவகாசியில் இருந்து திருப்பூர் வந்த மணிகண்டனின் மனைவி, குழந்தைகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

----


Next Story