350 இளைஞர்-இளம்பெண்கள் வேலைக்கு தேர்வு


350 இளைஞர்-இளம்பெண்கள் வேலைக்கு தேர்வு
x
தினத்தந்தி 20 Aug 2023 1:45 AM IST (Updated: 20 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் 120 தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேலைக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்தனர். இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்றனர். 8-ம் வகுப்பு முதல் டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் படிப்புகள் உள்ளிட்ட படிப்புகளை பயின்ற 2 ஆயிரத்து 500 பேர் கலந்துகொண்டனர். அனைவரும் மத்திய, மாநில அரசுகளின் இலவச திறன் வளர்ப்பு பயிற்சிக்கு பதிவு செய்யப்பட்டனர். இதில் 350 பேர் தனியார் நிறுவனங்களில் வேலைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து கலெக்டர் பூங்கொடி கலந்துகொண்டு, தேர்வான இளைஞர்-இளம்பெண்களுக்கு வேலைக்கான ஆணைகளை வழங்கினார். இதில் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் திட்ட இயக்குனர் சரவணன், திண்டுக்கல் ஆர்.டி.ஒ. கமலக்கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் பிரபாவதி, வேலைவாய்ப்பு அலுவலர் காமேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story