தொடர்ந்து பெய்து வரும் மழையால் குமரியில் 357 குளங்கள் நிரம்பின
குமரியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 357 குளங்கள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டின.
நாகர்கோவில்:
குமரியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 357 குளங்கள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டின.
மழை
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. காலையிலும் சில இடங்களில் சாரல் மழை பெய்தது.
காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பாலமோரில் 7.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மற்றப்பகுதிகளில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பெருஞ்சாணி அணை- 2.8, புத்தன் அணை- 3, பேச்சிப்பாறை அணை- 1, பூதப்பாண்டி- 1 என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது.
அணைகளுக்கு நீர் வரத்து
அதேசமயம் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 648 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 262 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 812 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 535 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 25 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 27 கன அடி தண்ணீரும் வருகிறது. பொய்கை அணைக்கு வினாடிக்கு 3 கனஅடி நீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 4 கன அடி தண்ணீரும் வந்து கொண்டு இருக்கிறது. முக்கடல் அணைக்கு வினாடிக்கு 9.1 கனஅடி நீர் வருகிறது அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்படுகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால்தொடர்ந்து பெய்து வரும் மழையால்
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் மொத்தம் 2,040 குளங்கள் உள்ளன. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 357 குளங்கள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 500-க்கும் மேற்பட்ட குளங்களில் 75 சதவீதம் தண்ணீர் உள்ளது. அந்த குளங்களும் விரைவில் நிரம்பி விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.