முத்திரையிடாத 36 தராசுகள் பறிமுதல்


முத்திரையிடாத 36 தராசுகள் பறிமுதல்
x

முத்திரையிடாத 36 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி

திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் முத்திரை ஆய்வாளர்களுடன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்தி, பாலசுப்பிரமணியன், நூருன்னிசா, லட்சுமி ஆகியோருடன் இணைந்து சட்டமுறை எடையளவு சட்டம் 2009-ன் கீழ் திருச்சி மாநகர பகுதியில் உள்ள மீன்மார்க்கெட் மற்றும் இறைச்சிக்கடைகளில் கூட்டாய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 68 இறைச்சி மற்றும் மீன் கடைகளில் நடத்தப்பட்ட கூட்டாய்வில் மீன் மற்றும் இறைச்சி விற்பனைக்கு பயன்படுத்தப்படும் தராசுகளில் முத்திரை மற்றும் மறுமுத்திரையிடாத மற்றும் எடை குறைவாக நுகர்வோர் பாதிக்கப்படும் வகையில் பயன்படுத்தப்பட்ட 36 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, மின்னணு தராசுகள், மேடை தராசுகள் மற்றும் நீட்டல் அளவைகள், முகத்தல் அளவைகளை பயன்படுத்துபவர்கள் உரிய காலங்களில் தங்களது பயன்பாட்டில் உள்ள எடையளவுகளை சம்பந்தப்பட்ட முத்திரை ஆய்வாளர்களிடம் சரிபார்த்து முத்திரையிட்டு கொள்ள வேண்டும். மேலும், முத்திரையிட்டதற்கான சரிபார்ப்பு சான்றிதழை நுகர்வோருக்கு தெரியும் விதமாக தங்களது கடை நிறுவனங்களில் காட்டி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story