மக்கள் குறைதீர் கூட்டத்தில் 361 மனுக்கள் பெறப்பட்டன
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 361 மனுக்கள் பெறப்பட்டன/
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 361 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதாராமு அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், கை-கால் பாதிக்கப்பட்ட, செவித்திறன் குறைபாடுடையவர்கள் மற்றும் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்கள் என மொத்தம் 30 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புடைய மோட்டார் பொருந்திய தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், உதவி ஆணையர் (கலால்) மாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.