கடலூர் மத்திய சிறையில் இருந்த பா.ம.க.வினர் 38 பேர் மதுரை, பாளையங்கோட்டைக்கு மாற்றம்


கடலூர் மத்திய சிறையில் இருந்த பா.ம.க.வினர் 38 பேர் மதுரை, பாளையங்கோட்டைக்கு மாற்றம்
x

வன்முறையில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் இருந்த பா.ம.க.வினர் 38 பேர் மதுரை, பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து கடந்த 28-ந்தேதி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டம் வன்முறையாக வெடித்தது.

இதில் வன்முறையில் ஈடுபட்டதாக, பா.ம.க.வை சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 38 பேர் கடலூர் மத்திய சிறையிலும், 2 சிறுவர்கள் கடலூர் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பா.ம.க.வை சேர்ந்த 20 பேர் பாளையங்கோட்டை சிறைக்கும், 18 பேர் மதுரை மத்திய சிறைக்கும் நேற்று மாற்றப்பட்டனர். இவர்கள் நிர்வாக காரணங்களுக்காக சிறைமாற்றம் செய்யப்பட்டதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மத்திய சிறையில் உள்ளவர்களை பா.ம.க.வை சேர்ந்த தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் சந்திக்க வருவதாக தகவல் வெளியானது. அவ்வாறு சந்திக்க வரும்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், இவர்கள் சிறை மாற்றம் செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story