வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் கொள்ளை


வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் கொள்ளை
x

வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் கொள்ளை

திருப்பூர்

அவினாசி

அவினாசியில் பனியன் நிறுவன தொழில்நுட்பவியலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன்நகை, ரூ.60 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இது குறித்து ேபாலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பனியன் நிறுவன தொழில்நுட்பவியலாளர்

அவினாசி அருகே உள்ள ராயம்பாளையம் நியூடவுன் சக்திநகரை சேர்ந்தவர் விஷ்ணுபிரபு (வயது 33). இவர் பனியன் நிறுவன தொழில்நுட்பவியலாளாக இருந்து வருகிறார். இவருடைய தாயார் திருப்பூர் அங்கேரிபாளைத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் விஷ்ணு பிரபுவின் தாயாருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தாயாைர பார்க்க விஷ்ணுபிரபு வீீட்டை வீட்டு குடும்பத்துடன் நேற்று முன்தினம் அங்கேரிபாளையம் சென்று விட்டார். பின்னர் நேற்று காலையில் ராயம்பாளையம் சக்திநகர் வந்தார். அப்போது வீட்டின் கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

நகை, பணம் கொள்ளை

இதனால் அதிர்ச்சியடைந்த விஷ்ணுபிரபு வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவின் லாக்கர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும் துணிகள் சிதறிக்கிடந்தது. மேலும் பீேராவில் வைக்கப்பட்டிருந்த ரூ.60 ஆயிரம், 39 பவுன் நகை ஆகியவற்றை காணவில்லை. மர்ம ஆசாமிகள்அவற்றை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கொள்ளை நடத்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து சாலை வரை ஓடியது. பின்னர் அங்கு நின்று ெகாண்டது. அதன்பின்னர் தடய அறிவியல் நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

தனிப்படை அமைப்பு

விஷ்ணு பிரபு அங்கேரிபாளையம் செல்வதை தெரிந்து கொண்ட ஆசாமிகள், அவருடைய வீட்டிற்கு சென்று கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிவந்தது. இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பனியன் நிறுவன தொழில்நுட்பவியலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

------------------


Next Story